Monday, March 30, 2015

Namasankeerthanam every day....

From Sage of Kanchi group on Facebook:

குரு உபதேசம் 86
பஜனை:
ஒவ்வோர் குடும்பத்திலும் உள்ள அனைவரும் மாலை வேளைகளில் வீட்டிலேயே ஒரு பத்து நிமிஷமாவது பகவத் நாமங்களைப் பாடி பஜனை செய்யவேண்டும்.
கீர்த்தனங்களைப் பாட வேண்டும். நாமாவளிகளைக் கானம் செய்யவேண்டும்.
பெரிய சங்கீத ஞானம், ராக பாவம், சாரீர வசதி இல்லாவிட்டாலும் பரவாயில்லை. பக்தி பாவனை தான் முக்கியம்.
நம் நித்திய க்ஷேமத்தையும், ஆனந்தத்தையும் பெருக்கவல்ல பெரிய திதி இது.
பஜனை பண்ண தெரிந்தவர்கள் மற்றவர்களையும் கூட்டி, பகவந் நாமாவைப் பாடப் பண்ண வேண்டும்.
பகவந் நாமாவுக்கு இல்லாத சக்தி எதற்கும் இல்லை. அது ஸர்வ பாப பரிகாரம், சகல தோஷ நிவ்ருத்திகரம். ஆனாலும் அதைச் சொல்கிறவர் எந்த அளவு "கான்ஸெண்ட்ரேஷனோடு" சொல்கிறார் என்பது முக்கியம். தினம், தினம் சொல்வதில் மனஸ் கலக்காமல் "மெக்கானிகலாக" ஆகிவிடக் கூடாது.
ஏதேதோ விளையாட்டுக்களில் திரிந்து கொண்டிருக்கிற குழந்தை அம்மாவின் நினைப்பு வந்ததும் அவளிடம் வந்து "அம்மா அம்மா" என்று கத்துகிறதல்லவா? அதில் வெட்கமோ, சங்கீத அழகோ இல்லை.
லோக மாதாவான பரமாத்மாவை லௌகீக வியாபாரங்களிடையே சிறிது நேரமாவது நினைத்து இப்படியே ராமா, கிருஷ்ணா, சிவா, அம்பா என்று கத்த வேண்டும். இந்தப் பழக்கம் ரொம்பவும் நல்லது.

No comments:

Post a Comment